• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

5000 ஆண்டுகளுக்கு முன்னரே பீர் தயாரித்த மக்கள் - உலகிலேயே பழமையான மது ஆலை கண்டுபிடிப்பு!!!

இந்தியாவில் ஏகப்பட்ட துறைகள் இருந்தாலும் அனைவராலும் ஆர்வத்துடன் பார்க்கப்படும் துறைகளில் ஒன்று என்றால் அது தொல்லியல் துறை தான். சிறிய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பழங்காலத்தில் இப்படியெல்லாம் நிகழ்ந்திருக்கிறதா? என்று ஆர்வத்துடன் பார்ப்போம்.


தற்போது தொல்லியல் ஆராய்ச்சியில் ஒரு படியாக, 5000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த, மது ஆலையை எகிப்தில் கண்டுபிடித்து உள்ளனர். இது உலகிலேயே மிக மிக பழமையானது என்றும் ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்து உள்ளார்கள்.இந்த தொல்பொருள் ஆளை எகிப்தில் உள்ளதாகவும் கிமு 3150 முதல் கிமு 2613 வரை இருந்த முதல் பேரரசை உருவாக்கிய மன்னன் நார்மர் காலத்தில் அந்த மது ஆலை அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.



இரண்டு வரிசையில் 40 பானைகள் வைக்கப்பட்டது. தண்ணீர் மற்றும் தானியங்கள் கலந்து அந்த காலத்திலேயே பீர் என்று சொல்ல கூடிய மதுபானம் தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios