பிபிசி சமையல் நிகழ்ச்சியில் நிஜெல்லா லாசன் என்பவர் 'மைக்ரோவேவ்' என்று சொல்வதற்கு பதில் வினோதமாக மீ-க்ரோ-வா-வே என்று உச்சரித்து உள்ளார். இந்த வார தொடக்கத்தில், பிரபல சமையல்காரர் நிஜெல்லா லாசன் தனது பிபிசி தொடரான நிஜெல்லாவின் குக், ஈட், ரீப்பீட்டில் பின்வறுமாறு செய்துள்ளார். "இப்போது, நான் இந்த கட்டத்தில் மேஷ் செய்கிறேன்," என்று அவர் தனது உருளைக்கிழங்கைப் பிசைந்தார். "ஆனால் எனக்கு இன்னும் கொஞ்சம் பால் தேவை, எனவே நான் மீ-க்ரோ-வா-வேவில் சூடேற்றுகிறேன்," என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து நெட்டிசன்கள் அவரை கிண்டலும் கேலியும் செய்தனர். இதனைக் குறித்து நட்சத்திரம் கோபமடைந்ததாக தெரிகிறது. எனவே ட்விட்டரில் அவர் தனதுவார்த்தையை தெளிவுபடுத்தினார். "சரி, நான் அப்படி தான் சொன்னேன், ஆனால் உண்மையில் அதுவே சரியான உச்சரிப்பு என்று நான் நினைக்கிறேன்," என்று லாசன் ஒரு ரசிகருக்கு பதிலளித்தார். சிறிது நேரம் கழித்து "இதை இப்போது முடித்து கொள்கிறீர்களா?" என்றுஅவர் பதிவிட்டார்.