• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

பிரம்மாண்ட பெங்களூரு

தென்னிந்தியாவின் முதல் பெரிய தனியார் கலை அருங்காட்சியகத்தை பெங்களூரில் தொடங்க உள்ளனர்.

கலை மற்றும் புகைப்பட அருங்காட்சியகம் (எம்ஏபி) டிசம்பரில் திறக்க திட்டமிடப்பட்டது, ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் தாமதத்தை ஏற்படுத்தியது. கஸ்தூர்பா சாலையில் ஐந்து மாடி கட்டடமான இயற்பியல் தளத்தில் அடுத்த ஆண்டு அருங்காட்சியகம் திறக்கப்படும்.

எனினும் அரசாங்கத்தினர் இதனை இப்பொழுது டிஜிட்டலில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளனர். டிசம்பர் 5 முதல் 11 வரை டிஜிட்டல் மெய்நிகர் திருவிழாவை நிறுவி பல்வேறு கலை வடிவங்களைக் கொண்டாட போவதாக தெரிவிக்கின்றனர்.



ஆன்லைனில் அருங்காட்சியகத்தை திறப்பது மக்களை கலையை நோக்கி இழுக்கும். மேலும் அருங்காட்சியகத்தை பிடிக்காதவர்கள் கூட கலை மீது ஆர்வம் உள்ளவர்களாக உள்ளனர் என்று தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியின் இயக்குநர் காமினி, "கலை(யே) வாழ்க்கை" நிகழ்வு டிசம்பர் 5 ஆம் தேதி ஆரம்பிக்கப்படும், என்றார். நிகழ்ச்சியில் ஓவியம், பாடல், நடனம், இசை ஆகியவை நடைபெறும் என்றார். பெரும் புள்ளிகளான ஜாவத், ஷபானா அஸ்மி, மாளவிகா சரு, அருந்ததி நாஹ், நந்திதா தாஸ் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வருகின்றனர்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios