மிஸ்டி கோப்லாண்ட் எழுதிய புதிய புத்தகமான பன்ஹெட்ஸில் மிஸ்டி என்ற இளம்பெண்ணும் அவரின் நண்பர்களும் நடனத்தை நேசித்த கதை சொல்லப்படுகிறது . இந்த கதையில், ஸ்டுடியோவில் உள்ள நடனக் கலைஞர்கள் "வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலிருந்தும் வருகிறார்கள்" என்று கோப்லாண்ட் கூறுகிறார். "அவர்கள் வெவ்வேறு பின்னணிகள், வெவ்வேறு உடல் வகைகள், வெவ்வேறு தோல் நிறம், வெவ்வேறு முடி நிறம், வெவ்வேறு இனங்கள் என்று தனித்தன்மை பெற்றிருந்தனர்."

கோப்லாண்ட் அமெரிக்கன் பாலே தியேட்டரின் முதன்மை நடனக் கலைஞரும் சிறந்த எழுத்தாளராகவும் உள்ளார். அவரது 2014 புத்தகம் ஃபயர்பேர்ட் , ஸ்காட் கிங் விருதை வென்றது. அவர் 13 வயதில் கிளாசிக்கல் பாலே(balley)வில் பயிற்சி தொடங்கினார்.
"கதைகளில் வரும் கதாபாத்திரங்களில் பெரும்பாலானவை நான் வளர்ந்த எனது உண்மையான நண்பர்களை அடிப்படையாகக் கொண்டவை "... என்று அவர் விளக்குகிறார்.இந்த அழகான உறவுகளின் கதையை பகிர்ந்து கொள்ள நான் விரும்பினேன்.
" பன்ஹெட்ஸில், இளம்பெண் மிஸ்டி, கோப்பெலி என்ற பாலே நடனமாடுகிறார்.
கோப்பெலி- இது ஒரு பொம்மைக்கு உயிரூட்ட ஒரு வில்லத்தனமான திட்டத்தை வகுக்கும் ஒரு இளம் பொம்மை தயாரிப்பாளரின் கதை. இந்த கதை நம் எழுத்தாளர் அவர் பாலே கற்கும்போது நடனமாடிய முதல் பாலேவாகும். மேலும் அமெரிக்க பாலே தியேட்டரில் அவர் நடனமாடிய முதல் பெரிய முக்கிய வேடங்களில் இதுவும் ஒன்றாகும். "கோப்பெலி ஒரு வேடிக்கையான கதை. அதில் நிறைய வண்ணங்கள், நிறைய ஆடை மாற்றங்கள், நிறைய காட்சி மாற்றங்கள் இருந்தன" என்று மிஸ்டி கோப்லாண்ட் கூறுகிறார்.
இந்த புத்தகத்திற்கு ஓவியம் வரைந்தவர் செட்டர் ஃபியாட்ஸிக்பே . அவர் வழக்கமாக சூப்பர் ஹீரோக்களை வரைப்பவர். இதற்கு முன்பு நடனக் கலைஞர்களை வரைந்ததில்லை. "நடன நாடகத்திற்கு ஓவியம் வரைய என்னை அணுகியபோது நான் தண்ணீரிலிருந்து வெளிவந்த ஒரு மீனாக உணர்ந்தேன்" என்று ஃபியாட்ஸிக்பே கூறுகிறார்.
இந்த புத்தகம் இளம் நடனக் கலைஞர்களுக்கு ஸ்டுடியோவிலும் மேடையிலும் பயமின்றி இருக்க உதவும் என்று மிஸ்டி கோப்லாண்ட் நம்புகிறார்.