இரண்டு பேரைக் கொண்டு செல்லும் உலகின் முதல் சுய படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் இல்லாத கார் போலவே நீர்வழிகளில் செல்லக்கூடிய தன்னாட்சி படகுகளும் வரவேற்கத்தக்கதே. எம்ஐடி செயற்கை நுண்ணறிவு இதை தான் செய்கிறது.

இது “ரோபோட் II” என அழைக்கப்படுகிறது.
2016 ஆம் ஆண்டில்,முதன்முதலில் ஆராய்ச்சியாளர்கள் தானாக செயல் படும் படகை சோதித்தனர், இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு நீர்வழிப்பாதையில் முன்னோக்கி, பின்னோக்கி மற்றும் பக்கவாட்டாக செ ன்றது. 2019 ஆம் ஆண்டளவில், தன்னாட்சி படகுகள் அவற்றின் திசையை மாற்றும் திறன் கொண்டு புத்திசாலித்தனமாக செயல்படுகின்றது.
எளிமையான சொல்ல வேண்டுமானால்,இதனால் நீர் சார்ந்த உபேர் சேவையைப் போல செயல்பட முடியும். ஆகவே, ஒருவர் ஒரு சவாரி க் கு கோரிக்கையை வைக்கும்போது, கணினி அவருக்கு அருகிலுள்ள ரோபோட் || நியமிக்கும். ரோபோட் II பயணிகளை எடுத்த பிறகு, அது போக்குவரத்து நிலைமைகளைப் கணித்து நீர்வழிப்பாதையில் மிகவும் சாத்தியமான பாதையை வரைபடமாக்குகிறது.இதற்கு அது SLAM வழிமுறை மற்றும் LIDAR & GPS சென்சார்களைப் பயன்படுத்துகிறது.