• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

இரத்தக் கட்டிகளை ஏற்படுத்தும் ஆட்டோஆன்டிபாடிகள்

ஆட்டோ இம்யூன் ஆன்டிபாடி நோய் என்பது நமது உடம்பில் உள்ள எதிர்ப்புசக்தி நமது செல்களையே தாக்குவது ஆகும்.இது இரத்த உறைவு, பக்கவாதம் மற்றும் இருதய அடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளை ஏற்படுத்தும். மேலும், கோவிட்-19 இல் இத்தகைய நுண்ணிய கட்டிகள் நுரையீரலில் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தி ஆக்சிஜன் பரிமாற்றத்தை பாதிக்கும்.


"ஆட்டோஆன்டிபாடிகளுக்கும் கோவிட்க்கும் இடையிலான தொடர்பு எதிர்பாராதது" என்று மிச்சிகன் மெடிசின் ஃபிராங்கல் இருதய மையத்தின் உதவி பேராசிரியரும், தேசிய சுகாதார நிறுவனம், நுரையீரல் மற்றும் இரத்த நிறுவனத்தில் புலனாய்வாளருமான இணை எழுத்தாளர் யோகன் காந்தி கூறுகிறார்.

கோவிட்-19 ஆல் மிகவும் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளில் பாதி பேருடைய ரத்தத்தில் ஆபத்தான ஆன்டிபாடிகள் மற்றும் சூப்பர் ஆக்டிவேட்டட் நியூட்ரோபில்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

"டைபிரிடாமோல் ஒரு பழைய மருந்து எனினும் பாதுகாப்பானது மற்றும் மலிவானது " என்று காந்தி கூறுகிறார். "இரத்த உறைதலை தடுக்க 20 ஆண்டுகளுக்கு முன்பு எஃப்.டி.ஏ இந்த மருந்துக்கு ஒப்புதல் அளித்தது, ஆனால் கோவிட்டில் ஏற்படும் இரத்த உறைதலையும் சரிசெய்யும் என சமீபத்தில் தான் கண்டுபிடித்து உள்ளனர்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios