ஆஸ்திரேலிய நாட்டின் அறிவியல் நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்.ஓவால் உருவாக்கப்பட்டு இயக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த தொலைநோக்கி, அதன் முதல் ஆகாய கணக்கெடுப்பின் போது மூன்று மில்லியன் விண்மீன் திரள்களை 300 மணி நேரத்திற்குள் பதிவு செய்துள்ளது. இந்த ஆய்வின் ஆரம்ப முடிவுகள் நவம்பர் 30 அன்று ஆஸ்திரேலியாவின் இதழில் வெளியிடப்பட்டன.

அஸ்காப் என்றால் என்ன? அஸ்காப் என்பது ஒரு வடிவமைக்கப்பட்ட தொலைநோக்கி. மேலும் அது பெர்த்திலிருந்து வடக்கே சுமார் 800 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது பிப்ரவரி 2019 இல் உருவாக்கப்பட்டது. 2021 முதல் பெரிய அளவிலான திட்டங்களைத் தொடங்குவதற்காக தற்போது வானத்தில் கணக்கெடுப்புகளை நடத்தி வருகிறது.
அதன் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று அதன் பரந்த பார்வைக் களமாகும். இதன் காரணமாக அதனால் வானத்தின் பரந்த படங்களை மிக விரிவாக படமெடுக்க முடிகிறது. தொலைநோக்கி சி.எஸ்.ஐ.ஆர்.ஓ உருவாக்கிய புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது உயர் கணக்கெடுப்பு வேகத்தை அடைய ஒரு வகையான “ரேடியோ கேமரா” மற்றும் 36 டிஷ் ஆண்டெனாக்களைப் பயன்படுத்துகின்றது. அவை ஒவ்வொன்றும் 12 மீ விட்டம் கொண்டவை.
இந்த ஆய்வின் முடிவுகள் முக்கியமாக இரண்டு காரணங்களுக்காக குறிப்பிடத்தக்கவை. முதலாவதாக, அஸ்காப் யுனிவர்ஸை வரைபடமாக்கிய எடுத்துகொண்ட நேரம் மிகவும் குறைவானது. இரண்டாவது, கணக்கெடுப்பின் விளைவாக சேகரிக்கப்பட்ட தரவு வானியலாளர்களுக்கு பெரிதும் உதவும்.