தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, பல கலைஞர்கள் ராஜ்கோட்டில் உள்ள ஒரு கலைக்கூடத்தில் 70 ரங்கோலிகளை வரைந்துள்ளனர்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, நடிகர்கள் பிரபாஸ், சோனு சூத், ரம்யா கிருஷ்ணன் போன்ற பிரபலங்களின் உருவப்படங்களை உருவாக்க கலைஞர்கள் பல வண்ணங்களைப் பயன்படுத்தினர்.

ஒரு ரங்கோலி வரைந்தவர் “ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் பல்வேறு ரங்கோலிகளை உருவாக்குகிறோம். இந்த ஆண்டு, எங்கள் முதல்வர் விஜய் ரூபானிக்கு ஒரு ரங்கோலி வரைய முடிவு செய்தேன். பலர் இங்கு வந்து எனது வேலையைப் பாராட்டியுள்ளனர்",எனக் கூறினார்.
அஜந்தா ஆர்ட்ஸ் கேலரியில் நிகழ்வின் அமைப்பாளர் ஹரேஷ் பட்லியா கூறுகையில், “சுமார் 35 மாணவர்கள் 70 ரங்கோலிகளை உருவாக்கியுள்ளனர். பல ஆளுமைகளின் ரங்கோலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் தங்கள் திறமையையும் கலைத் திறனையும் வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்கியுள்ளோம். எல்லோரும் இங்கு மிகவும் உற்சாகமாக பணியாற்றியுள்ளனர் ”, என்றார்.
மேலும் அவர் "கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, நாங்கள் அரசின் வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடித்துள்ளோம்", என்று கூறினார்.