ஆர்டிஸ்ட் வாக் என்பது கலையை மேம்படுத்தும் ஒரு முயற்சி. ஓவியர் ரோஷா நட் மற்றும் அவரின் நண்பர் ஹோலி கோலியருக்கும் இடையிலான கூட்டு முயற்சியில் தொடங்கிய ஒரு கலைப் பாதை என்று கூறலாம். சாதாரண காலங்களில் காட்சியகங்களில் தங்கள் ஓவியங்களை வெளியிடும் இவர்கள் இப்போது தங்கள் ஓவியங்களை ஜன்னல்களில் வரைகின்றனர்.

மார்ச் மாதத்தில், முதல் ஊரடங்கிற்கு சற்று முன்பு, நட் மற்றும் கோலியர் லண்டனில் ஒரு கண்காட்சியை நடத்தினர், அதில் ஜெர்மி டெல்லர் மற்றும் பென் வில்சன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
" பல கலைஞர்கள் ஸ்டுடியோக்களை தங்கள் வீடுகளுக்கு மாற்றியுள்ளனர். கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வேலையைக் மக்களிடம் வெளிபடுத்த முடியாத ஒரு கலைஞராக இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனவே நாங்கள் நேர்மறையான சிந்தனையோடு சமூகத்துடன் இணைவதற்கான ஒரு வேடிக்கையான வழியை செய்ய விரும்பினோம்", என்கின்றனர் இந்த நண்பர்கள்.

கோலியர் மற்றும் நட் ஏழு வாரங்களில் இந்த ஓவியங்களை வரைந்துள்ளனர். இரவு நேரங்கள், அதிகாலை என்றுபாராமல் வேலை செய்ததாக கூறுகின்றனர். பலர் இவர்களை தங்கள் ஜன்னல்களில் வரைய அணுகி
உள்ளனர். கிட்டத்தட்ட 115 கலைஞர்களும் இவர்களுடன் இணைந்தாக கூறி மகிழ்ச்சி அடைகிறார் ரோஷா நட்.