
ஒப்பனை கலைஞர் ரோமானி-ஜேட் துல்லோச், 22, தனது முகத்தை காகிதம் போல் பயன்படுத்தி கலை அம்சங்களை உருவாக்கி உள்ளார்.
ஒவ்வொரு படைப்பையும் வடிவமைக்க அவருக்கு ஒரு நாள் ஆனது. அதை முழுமைப்படுத்த நான்கு மணி நேரம் ஆனது. அலங்காரத்தைத் துடைக்க வெறும் 15 நிமிடங்கள் தான் ஆகும் எனினும் அதைத் தொடர்ந்து ஒரு நாள், தோல் பராமரிப்புக்காக அவர் ஓய்வு எடுக்க வேண்டி இருந்தது. ஆர்.ஜே என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவர் இதனைக் குறித்து கூறுகையில்: "நான் சிறு வயதிலிருந்தே அலங்காரம் செய்யத் தொடங்கினேன், என் அம்மா அலங்காரம் செய்வதைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது.
நான் அலங்காரம் செய்வதை நேசித்தேன், கலையையும் நேசித்தேன், இரண்டையும் இணைப்பது எனக்கு மிகவும் பிடித்தது. முதலில் கண் அலங்காரம் செய்து பயிற்சி எடுத்தேன். பிறகு முகம் முழுவதும் செய்ய தொடங்கினேன், என்றார்.