கூகுள் இன்று ஒரு புதிய மொபைல் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு தீர்வை அறிமுகப்படுத்தியது. ஆண்ட்ராய்டு எண்டர்பிரைஸ் எசென்ஷியல்ஸ் என்று அதன் பெயர் இருந்தபோதிலும், உண்மையில் இது சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களை இலக்காகக் கொண்டது.

புதிய சேவையானது, சிறு வணிக ஊழியர்கள் நிறுவனத்தின் தரவைப் பாதுகாக்க தேவையான அம்சங்களை உள்ளடக்கியது. மேலும் கூகுள் பிளே ஸ்டோருக்கு வெளியே செயலிகளை நிறுவுவதிலிருந்து பயனர்களை தடுக்கிறது. ஆகவே, இது ஒட்டுமொத்த அமைவு செயல்முறையை எளிதாக்க முயற்சிக்கிறது.
முதன்மையாக சிறிய நிறுவனங்களை இலக்காகக் கொண்டிருந்தாலும், சாதனங்களுக்கு சில அடிப்படை பாதுகாப்புகளை நீட்டிக்க விரும்பும் பெரிய நிறுவனங்களுக்கு இந்த வசதி செயல்படக்கூடும் என்று கூகுள் குறிப்பிடுகிறது.
ஆரம்பத்தில் அமெரிக்காவின் விநியோகஸ்தர்களான சினெக்ஸ் மற்றும் இங்கிலாந்து தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஆண்ட்ராய்டு எண்டர்பிரைஸ் எசென்ஷியல் பணியாற்ற இருப்பதாக கூகுள் கூறுகிறது. மேலும் கூகுள் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி மாதத்தில் ஆன்லைன் வெளியீட்டு நிகழ்வும் டெமோவும் வழங்கும் என்று தெரியவந்துள்ளது.