தற்பொழுது மாறிவருகின்ற அசாதாரண சூழ்நிலையில் பல்வேறு நோய்கள் மனிதனை தாக்கி வருகிறது. குறிப்பாக வித்தியாசமான காலநிலையினால், அதாவது மழை பெய்ய வேண்டிய நேரத்தில் வெயிலும்,வெயில் அடிக்க வேண்டிய காலக்கட்டத்தில் அதிகமான மழையும் பெய்து வருகிறது. இது போன்ற காலநிலையினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.
இப்பொழுது பரவிக் கொண்டிருக்கின்ற நோய்களுள் முக்கியமானது தோல் நோய். இந்த நோயின் காரணமாக நமது தோளில் சில பல அழற்சிகள் ஏற்படுகிறது.தோல் நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் சூரியனில் இருந்து வெளிவரும் புரா ஊதா கதிர்கள் தான்.

அமெரிக்கன் அகாடமி ஆப் டெர்மடோலஜிஆய்வு தகவலின் படி திராட்சை பழங்கள் சாப்பிட்டால் சூரியனில் இருந்து வரும் புறஊதா கதிர்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.திராட்சை பழங்களில் உள்ள பாலிபீனால்கள், தோல் மற்றும் தசைகளை பாதுகாக்கும் என தெரிய வந்துள்ளது.