12 வயது சிறுமி, டிக்டோக்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். நிறுவனம் குழந்தைகளின் தரவை சட்டவிரோதமாக பயன்படுத்துகிறது என்று கூறி இங்கிலாந்து நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்துள்ளார் .

எனினும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக "வலுவான கொள்கைகள்" இருப்பதாகவும், 13 வயதிற்குட்பட்டவர்களை செயலியை உபயோகிக்க அனுமதிப்பதில்லை என்றும் டிக்டோக் கூறுகிறது. டிக்டாக் இந்த வகையான வழக்கில் ஆஜர் ஆவது முதல்முறை இல்லை. குழந்தைகளின் தரவைக் கையாண்டதற்காக 2019 ஆம் ஆண்டில் டிக்டோக்கிற்கு அமெரிக்காவில் 5.7 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இம்முறை சட்ட நடவடிக்கைக்கு இங்கிலாந்து குழந்தைகள் ஆணையர் அனே லாங்ஃபீல்ட் ஆதரவு அளிக்கிறார். டிக்டோக் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தரவு பாதுகாப்பு சட்டங்களை மீறியதாக அவர் நம்புகிறார். இங்கிலாந்தில் டிக்டோக்கைப் பயன்படுத்தும் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு இந்த வழக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று திருமதி லாங்ஃபீல்ட் கூறியுள்ளார்.