சுற்றுலாவிற்கு போகிறோம், போகவில்லை என்பது இரண்டாவது விசயம். ஆனால், சுற்றுலா செல்லலாம் என்று யாராவது சொன்னாலே போதும் நம்மை அறியாமல் நம் முகத்தில் சிறுதுளி புன்னகை ஏற்பட்டுவிடும். 2019 டிசம்பர் மாதம் முதல் பரவிய கொரோனாவால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் சுற்றுலா துறை கலையிழந்துவிட்டது.
கொரோனா தாக்கம் குறைந்து வரும் இந்த சூழ்நிலையில் களையிழந்து சுற்றுலா துறையை களை கட்டவைக்க்க வேண்டும் என்ற புதிய எண்ணத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு சுற்றுலா நிர்வாகம் அல்டிமேட்டான திட்டத்தை தீட்டியுள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் சாண்டா மரியா எனும் பள்ளத்தாக்கு உள்ளது. இங்கு அடர்ந்த மரங்கள், மதுபான ஹோட்டல்கள், கண்ணை கவரும் பார்கள், அழகான கடற்கரை என சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேரு அம்சங்கள் இங்கு காணப்படுகிறது. இந்த இடத்திற்கு சுற்றுலா வந்து 2 நாள் தங்குபவர்களுக்கு 100 அமெரிக்க டாலர்கள் இலவசமாக தரப்போவதாக சுற்றுலா நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த 100 டாலர்கள் இந்திய மதிப்பில் 7,200 ரூபாய்கும். இத்திட்டம் அமெரிக்க சுற்றுலா துறையை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.