அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பகுதியை சேர்ந்த 47 வயதான, தொழிலதிபரான தேவ் ஆஸ்பிரே 180 வரை வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.சொன்னதோடு மட்டுமல்லாமல் அதற்கான முயற்சியையும் எடுத்து வருகிறார்.
180 ஆண்டுகள் வாழ வேண்டும் என்பதற்காக ஸ்டெம் செல்களை உடலுக்குள் செலுத்திக்கொள்ளும் சிகிச்சையை அவர் எடுத்து வருகிறார். இந்த சிகிசிச்சைக்கு இந்திய மதிப்பில் 87 லட்ச ரூபாய் செலவாகுமாம். ஆனாலும் கூட அதிக நாட்கள் வாழ வேண்டும் என்ற முயற்சியில் இவர் இந்த சிகிச்சையை எடுத்து வருகிறார்.

“வயதாகும் போது நமது ஸ்டெம் செல்களும் அதோடு சேர்ந்து காலியாகி விடும். எனக்கும் தான். நான் அதை தடுக்க என்ன செய்கின்றேன் என்றால் இடைவிடாது உண்ணா நோன்பு இருக்கிறேன். அதன் மூலம் அதிக ஸ்டெம் செல்களை பெறுகிறேன். அதை எனது உடலுக்குள் தேவையான இடங்களுக்கு நகர்த்திக் கொள்கிறேன். அதன் மூலம் நான் என்றுமே எவர்கிரீன் இளைஞனாக இருப்பேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.