இயற்கையாக ஏற்பட்டுள்ள குறைகளை களைவதற்காகவே எக்கச்சக்கமான டெக்னாலஜிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் செயற்கை முறையில் குழந்தைகளை பிறப்பிப்பது. டெஸ்ட் டியூப் பேபி முறை மூலம் குழந்தைகளை பிறப்பிப்பது தற்போது மிகவும் பிரபலமடைந்து வருகிறது.
பெரு தலைநகர் லிமாவில் இருக்கின்ற வனவிலங்குகளுக்கான பூங்கா ஒன்றில், செயற்கை கருவூட்டல் மூலமாக இரண்டு அமெரிக்க முதலைகள் பிறக்க வைக்க பட்டுள்ளன. அந்த நாட்டில் இருக்கின்ற இந்த வகையான முதலைகள் அழிவின் விளிம்பில் உள்ளதால் செயற்கை கருவூட்டல் மூலம் இந்த முதலைகள் உருவாக்க பட்டு உள்ளன. இந்த வகையான அமெரிக்க முதலைகளின் முட்டைகள் தனியாக பாதுகாத்து வைக்கப்பட்டு, பின்னர் அடைகாக்கப்பட்டது.

இந்த செயல்முறையானது, அதாவது இந்த முட்டை 90 நாட்கள் அடைகாத்து வைக்கப்பட்டது. பின்னர் இந்த முதலை குட்டிகள் முட்டையிலிருந்து உயிரோடு வெளிவந்த நிகழ்வு ஆராய்ச்சியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகத்தில் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களை இந்த முறை மூலமாக எளிதாக மீட்டெடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.