• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

அக்கறையுடன் அமேசான்!!!


அமேசான் தனது கணினி அறிவியல் எதிர்கால பொறியாளர் திட்டத்தை இந்தியாவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. ஒரு வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு இடுகை மூலம் அமேசான் ஆசிரியர்களுக்கான தேடலில் உள்ளது என்பது தெரிகிறது. இவர்கள் மூலம் கணினி அறிவியல் கல்வியை ஏழ்மையான குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு கொண்டு சேர்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு உள்ளூர் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் பணிபுரியும் பணி வழங்கப்படும். 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் இந்த திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் இடுகையில் கூறியுள்ளது. குழந்தை பருவத்தில் இருந்து கணினியைக் கற்பிக்கும் திட்டங்கள் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது. அங்கு நிறுவனம் 5,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 550,000 மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடநெறிகளை கற்பிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios