ஒரு பறக்கும் காரை உருவாக்குவதற்கு பல்வேறு நிறுவனங்கள் போட்டியிடும் போது, க்ளீன்விஷன் நிறுவனம் தனது ஏர்கார் விமான சோதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது, மேலும் இது சோதனையின் வீடியோவையும் யூடியூபில் வெளியிட்டது. ஸ்லோவாக்கியாவில் உள்ள பியஸ்டனி விமான நிலையத்தில் ஏர்காரின் சோதனை நிறைவடைந்தது.
க்ளீன்விஷன் வெளிட்ட வீடியோவில் ஒரு கார் சில நிமிடங்களில் விமானமாக மாற்றப்பட்டதைக் காணலாம். மேலும் சோதனைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர்கார் இரண்டு உள்ளிழுக்கும் இறக்கைகள் மற்றும் பாராசூட் வசதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மற்றும் அதன் ஏரோடைனமிக் ஃபியூஸ்லேஜ் பறக்கும் போது ஏர்காரை சிறப்பாக உயர்த்த உதவுகிறது. இது பயணிகளுக்கு போதுமான இடத்தை வழங்குகிறது.
ஏர்கார்புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 984 அடி நீளம் தேவைப்படுகிறது.2 இருக்கைகள் அல்லது 4 இருக்கைகள் கொண்டதும் உள்ளது.