முதன்முறையாக அமெரிக்க விமானப்படை ஒரு செயற்கை நுண்ணறிவு விமானியை பயன்படுத்தி ஒரு இராணுவ விமானத்தை இயக்கியது .ஒரு மில்லியனுக்கும் அதிகமான உருவகப்படுத்துதல்களை முடித்த பின்னர், µZero AI ப்ரோக்ராம் டிசம்பர் 15 அன்று கலிபோர்னியாவிற்கு மேலே ஒரு பயிற்சிப் பணியில் U-2 உளவு விமானத்தை வெற்றிகரமாக இயக்கியது. யு -2 உளவு விமானத்தை இயக்க சதுரங்கம், கோ மற்றும் வீடியோ கேம்களில் ஆதிக்கம் செலுத்தும் உலக முன்னணி கணினி நிரலான ஜீரோவை நாங்கள் மேன்மைப்படுத்தினோம், ”என்று டாக்டர் ரோப்பர் தெரிவித்தார்.

மனித விமானியால் செய்ய முடியாத சுழற்சி வித்தைகளை AI பைலட் செய்தது. இறுதியாக இனி அல்காரிதமிக் போர் தொடங்க உள்ளதாக டாக்டர் ரோப்பர் கூறினார்.