வைரல் புகைப்படத்தின் கட்டுக்கதை:
இந்த பேராசிரியரின் மனைவி குழந்தை பிறக்கும் போது இறந்துவிட்டதால் , தாய்மை உணர்வையும் சேர்த்து இவர் குழந்தைக்கு ஊட்டி வருகிறார். குழந்தையை பார்த்து கொள்வதோடு சேர்த்து தனது கடமையிலும் கண்ணியமாக இருக்கும் இந்த பேராசிரியரை வாழ்த்தலாமே ப்ரண்ட்ஸ்!! என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

உண்மை தான் என்ன??
இது 5 வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம். அவர் கையில் வைத்திருப்பது அவருடைய குழந்தை அல்ல. அவருடைய மாணவரின் குழந்தை ஆகும். மாணவர் பாடம் குறித்து கொள்ள குழந்தை இடையூறாக இருப்பதை உணர்ந்த ஆசிரியர் குழந்தையை வாங்கி மார்போடு அனைத்து கொண்டு பாடம் எடுக்கிறார். இந்த சூழலில் எடுக்கப்பட்ட புகைப்பதால் தற்போது வைரல் ஆவதன் காரணம் என்னவென்று தெரியவில்லை. போலியான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.