• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

படகு விபத்தில் உயிரிழந்த சிறுமி

புளோரிடா படகு விபத்தில் 16 வயது சிறுமி கொல்லப்பட்டார்.

ஹாலோவீன் விருந்து முடிந்து மது அருந்தி ஓட்டிய 16 வயது சிறுவனால் இந்த விபத்து

நேர்ந்தது.

ரேச்சல் ஹெர்ரிங் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை படகில் பயணம் சென்றார்.புளோரிடாவில் உள்ள இண்டர்கோஸ்டல் நீர்வழிப்பாதையில் படகு நிறுத்தத்தில் மோதியதால் உயிர் இழந்தார்.படகில் பயணித்த மற்ற ஆறு பேர் உயிர் தப்பினர்.


16 வயதான கவின் ஜான்ஸ்டன் என்பவரால் படகு இயக்கப்பட்டது, அவர் இப்போது கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


ஷெரிப்பின் புலனாய்வாளர்கள், விபத்துக்கு முன்னர் ஜான்ஸ்டனும் அவரது நண்பர்களும் ஹாலோவீன் விருந்தில் கலந்து கொண்டு, அங்கு அவர்கள் மது அருந்தினர் என்கின்றனர்.


விருந்துக்குப் பிறகு தனது பெற்றோரின் படகில் சென்ற ஜான்ஸ்டனுக்கு, மது அல்லது போதைப்பொருள் பயன்படுத்தியதின் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை.

அவரின் அதிவேகமும் படகின் மோசமான விளக்குகளும் விபத்துக்கு காரணிகளாக இருந்தன.








Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios