• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

நாயுடன் சென்றுவிட்டு மான்குட்டியுடன் வீட்டிற்கு வந்த 4வயது சிறுவன் - பிரம்மித்துபோன பெற்றோர்கள்!!!



வீட்டை விட்டு விளையாடுவதற்கு சென்ற அமெரிக்காவை சேர்ந்த நான்கு வயது சிறுவன், ஒரு சிறிய மான் குட்டியுடன் வீடு திரும்பிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.


அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீபன் பிரவுன் என்பவர் விடுமுறையை கொண்டாடுவதற்காக தன் குடும்பத்தினருடன் வர்ஜீனியா மாகாணத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஷெனாண்டோ தேசிய பூங்கா பக்கத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் தங்கி உள்ளார் . ஸ்டீபன் ப்ரவுனின் நான்கு வயது மகனான டொமினிக் ஒரு நாய் குட்டியுடன் விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளான்.


டொமினிக் விளையாடி விட்டு வீட்டிற்கு திரும்பும் போது தன்னோடு ஒரு சிறிய அழகான மான் குட்டியையும் தன்னோடு அழைத்து வந்துள்ளான். இதனை கண்ட பெற்றோர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். தன் மகனை அவன் அழைத்து வந்த மான் குட்டியுடன் நிற்க வைத்து பெற்றோர்களால் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios