வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்பு பள்ளி ஆசிரியர் ஒருவர் முகத்தில் புன்னகையை வரவழைக்கிறார். இது வீடியோ பதிவில் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோ ஒரு பள்ளியின் சிசிடிவியில் படமாக்கப்பட்டது.

வீடியோவில் ஒரு ஆசிரியர் தாழ்வாரத்தில் நடந்து, வகுப்பறைக்கு வெளியே நிறுப்பதைக் காணலாம். அவர் சில ஆழமான சுவாசங்களை எடுத்து, வகுப்பறைக்குள் செல்வதற்கு முன் புன்னகைக்க பயிற்சி செய்கிறார். இந்த வீடியோ வடக்கு சீனாவின் கின்ஹுவாங்டாவோ நகரில் உள்ள ஒரு பள்ளியில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆசிரியர் கூறுகையில், சமூக ஊடகங்களில் புகழ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், "ஒரு நல்ல ஆசிரியராக மட்டுமே இருக்க விரும்புவதாகவும் கூறினார்.