தையல் சம்பந்தப்பட்ட ஒரு சொல், "பெஸ்போக்". இது உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பொருள் என்ற அர்த்தம் கொண்டது. இதேவகையில் சாம்சங்கின் பெஸ்போக் குளிர்சாதன பெட்டிகள் CES 2021 இல் உலகில் அறிமுகமாக உள்ளது.

பெஸ்போக் குளிர்சாதன பெட்டிகள் உங்கள் சமையலறைக்கு ஏற்றவாறு முழுமையான வடிவமைப்புகளை வழங்குகின்றன. குளிர்சாதன பெட்டியின் நான்கு கதவுகளும் உங்கள் விருப்பத்திற்கேற்ப பொருள் மற்றும் வண்ணத்தில் வருகிறது . பிங்க் மற்றும் ஸ்கை புளு போன்ற அசாதாரண விருப்பங்கள் உட்பட நிறவேற்றப்படும். நீங்களே உங்கள் ரசனைகேற்ப வண்ணங்களையும் வசதிக்கேற்ப பொருட்களை தேர்வு செய்யலாம். உண்மையில், சாம்சங் முதன்முதலில் பெஸ்போக் வரிசையை ஐரோப்பிய சந்தைக்கு 2019 இல் அறிமுகப்படுத்தியது. எனவே இந்த ஆண்டு அமெரிக்கர்களுக்கு அதிக அளவு வண்ண தேர்வுகள் உள்ளன.