
66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த ஒரு புதைப்படிவம் ஒரு மீனின் உடையது என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. 15 அடி நீளமுடைய இந்த புதைப்படிவம் ஊர்வன இனத்தை சார்ந்தது என தவறாக அடையாளம் காணப்பட்ட பின்பு, தற்போது அது மீனின் உடையது என உறுதி செய்யப்பட்டது. இது ஒரு பெரிய சுறாமீனின் வடிவத்தை கொண்டிருப்பதாக தெரிவித்து உள்ளனர் பல்லுயிலாளர்கள்.