
இனி மொபைலை சார்ஜ் போட சவ்ச்சம்போர்டு தேடி அலைய அவசியம் இல்லை. மொபைல் சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும் பொழுது அதன் சுவிட்ச்-ஐ ஆஃப் செய்வது போன்ற குறும்புகளுக்கு வீண் சண்டைகளுக்கு இனி இடமே இல்லை.
நீங்கள் எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் இருந்த இடத்திலேயே உங்க மொபைலை சார்ஜ் செய்து கொள்ளலாம். ஒன்று மொபைல் அல்ல , ஒரே நேரத்தில், ஒரே சார்ஜரில் 3 சாதனங்களை சார்ஜ் ஏற்றி கொள்ள முடியும். அப்படிப்பட்ட வசதியை வழங்கி உள்ளது, நம் சாம்சங் நிறுவனம்.
சாம்சங் கேலக்ஸி ஏ 42 5 ஜி ஸ்மார்ட்போன், கேலக்ஸி ஃபிட் 2 ஸ்மார்ட் பேண்ட், 4 கே ப்ரொஜெக்டர், 'தி பிரீமியர்' 'மற்றும் கேலக்ஸி ஏ 7 (2020) டேப்லெட். நிறுவனத்தின் 'டியோ' வயர்லெஸ் சார்ஜரின் வாரிசான இவை QI வயர்லெஸ் சார்ஜிங் தரத்தை ஆதரிக்கிறது, மேலும் அதன் பெயர் குறிப்பிடுவது போல, பயனர்கள் ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்ய உதவுகிறது.
இதனை பற்றிய அனைத்து விவரங்களையும் சாம்சங் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை, ஆனால் அதிகாரப்பூர்வ ரெண்டர் இந்த சாதனம் தங்கள் ஸ்மார்ட்போன், வயர்லெஸ் இயர்பட் மற்றும் ஸ்மார்ட்வாட்சை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும் என்று அறிவுறுத்துகிறது. சார்ஜரின் ஒரு முனையில், குறிப்பிட்ட பகுதி ஸ்மார்ட்வாட்ச்களுக்காக நியமிக்கப்பட்டுள்ளது