காதலுக்கு சாதி, மதம், மொழி ஒரு தடையில்லை என்று நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வயது கூட ஒரு தடையே இல்லை என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக தென்னாப்பிரிக்க நாட்டில் ஒரு முதியவரை காதலித்து 29 வயதேயான பெண் நிரூபித்துள்ளார்.
தென்னாபிரிக்க நாட்டில் கேபிடவுன் என்ற நகரத்தில் வசித்து வரும் 29 வயதே ஆகும் பெண் டெர்சல் ராஸ்மசை அதே பகுதியை சேர்ந்த 80 வயதான வில்சன் ராசமஸ் எனும் தாத்தாவை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்க்கு சாட்சியாக அந்த தாத்தாவின் 53 வயதான மகள் கையெழுத்திட்டுள்ளார். அந்த தாத்தாவை பார்த்ததும் காதல் வயப்பட்டதாகவும், இந்த ஜென்மத்தில் அவர் தான் தன் கணவர் என்று தோன்றியதாகவும் டெர்சல் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த காதலிற்கு தன்னுடைய பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இறுதியில் தன்னுடைய காதலை பெற்றோருக்கு புரிய வைத்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு தற்போது தென்னாப்பிரிக்காவில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார் டெர்சல்.இந்த நிகழ்விற்கு நெட்டிசன்கள் மீம்ஸ் மற்றும் ட்ரோல்கள் மூலமாக தங்களுடைய மனக்குமுறல்களை கொட்டி தீர்த்து வருகின்றனர்.