• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

கண்டெடுக்கப்பட்ட மம்மிகள்



எகிப்தின் தலைநகரான கெய்ரோவின் தெற்கே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குறைந்தது 100 பண்டைய சவப்பெட்டிகளையும், சில மம்மிகளையும், 40 சிலைகளையும் கண்டுபிடித்தனர்.



2,500 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட இவற்றில், தங்க முகமூடிகளும் தாயத்துக்களும் இணைக்கப்பட்டு இருந்தன. வர்ணம் பூசப்பட்ட வடிவமைப்புகள் தெளிவாக காணப்படுகின்றன.


சனிக்கிழமையன்று சாகாரா நெக்ரோபோலிஸில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகள் அனைத்தும் உயர்ந்த தரம் வாய்ந்தவை மற்றும் உயர் வர்க்கத்தைச் சேர்ந்தவை என்றனர், எகிப்திய தொல்பொருள் அதிகாரிகள். இதை அவர்கள் குறிப்பிடுவதன் காரணம், இந்த சவப்பெட்டிகளின் அளவு மற்றும் தரம் கண்டுபிடிப்பைக் கூடுதல் சிறப்பானதாக ஆக்குவதால் தான்"என்று எகிப்தின் தொல்பொருள் கவுன்சில் பொதுச் செயலாளர் மொஸ்டபா வஜீரி கூறினார்.



தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட சவப்பெட்டிகளில் ஒன்றைத் திறந்தனர். உள்ளே இருந்த மம்மியை எக்ஸ்ரே செய்து அது எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதைக் காட்டினர்.


4 முதல் 5 அடி 7 அங்குல உயரமுள்ள மம்மி,ஒரு ஆண் என்று எக்ஸ்ரே காட்டியதாக வஜீரி செய்தியாளர்களிடம் கூறினார்.மேலும் சவப்பெட்டியில் இருப்பவர் தனது வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்திருப்பார் என்றும் பெரும்பாலும் 40லிருந்து 45 வயதிற்குள் இறந்து இருப்பார்

என்றும் கூறினார்.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios