• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

2021 அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்பட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயர் !!!





2021 அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவரின் பெயரை நோபல் கமிட்டி குழு, வரும் அக்டோபரில் அறிவிக்கும் என எதிர்பார்க்க படுகிறது.


2021 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசிற்கு தகுதியான நபர் என்ற பட்டியலில் சூழலியல் போராளி கிரேட்டா தன்பெர்க் , முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் , ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நாவலனி, உலக பொது சுகாதார அமைப்பு போன்ற பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. டொனால்டு டிரம்பின் பெயர் இரண்டாவது முறையாக பரிந்துரைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


உலகம் முழுவதும் இருக்கின்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசை வென்றவர்கள் என ஆயிரக்கணக்கானோர் நோபல் பரிசை பெறுவதற்கு சரியான நபர் இவர் தான்!! என்று பல்வேறு பெயர்களை பரிந்துரை செய்துள்ளனர்.


இனவெறிக்கு எதிராக போராடிய BLACK LIVES MATTER என்ற இயக்கத்தின் பெயரும் இடம்பெற்று உள்ளது. கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை ஐ.நா வின் உலக உணவு திட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

15 views0 comments

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios