சங்கர் ராம் சந்தனுஒடிசாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் ஒருவர் ஏழைகளுக்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் செய்து வருகிறார். இதற்கான காரணத்தை அவர் சொன்னது அவரது தாயை பெருமைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
மேற்கு ஒடிசாவின், சாம்பல் போர் மாவட்டம், புர்லா பகுதியில் வீர் சுரேந்திர சாய் இன்சிட்டிடியூட் ஒப்பி மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் என்ற பெயரில் அரசு மருத்துவமனை கல்லூரி செயல்பட்டு வருகிறது.அங்கு சங்கர் ராம் சந்தனு என்பவர் துணை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவர் தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றை தொடங்கி உள்ளார்.

அங்கு வரும் நோயாளிகளுக்கு வெறும் ஒரு ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை அளித்து வருகிறார். சேவை செய்யவது என்பதற்க்கே தனி மனம் வேண்டும். இதில் ஒரு ரூபாய் கட்டணத்தில், மாற்று திறனாளிகள், முதியோர்கள் போன்றவர்களுக்கு அந்த ஒரு ரூபாய் கட்டணத்தையும் பெறாமல் இலவசமாக மருத்துவம் பார்த்து வருகிறார்.
அம்மாவின் ஆசையே காரணம்!!
இது குறித்து ஒரு ரூபாய் டாக்டர் சங்கர் ராம் சந்தனு, " நான் மருத்துவராகி ஏழைகளுக்கு இலவசமாக சேவை செய்ய வேண்டும் என்பது என்னுடைய அம்மாவின் விருப்பம், என்னுடைய அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றுவது என்னுடைய கடமையும் கூட! மேலும் எனக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருப்பதால் இந்த முயற்சியை தொடங்கியுள்ளேன். ஏராளமான நோயாளிகள், மாற்று திறனாளிகள், குழந்தைகள் என தினமும் வருகிறார்கள். அவர்களுக்கு மருத்துவம் செய்வது" என்று கூறியுள்ளார்.