கடல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விஞ்ஞானிகள் கடலுக்கு அடியில் மூன்று கிலோமீட்டர் ஆளம் செல்லக்கூடிய திறனை வளர்ப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று இந்தியாவின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் சனிக்கிழமை தெரிவித்தார். சென்னையில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற அவர், வானிலை முன்னறிவிப்பில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும், சூறாவளிகள் உருவாகும் போதெல்லாம் ஒருபோதும் தவறான எச்சரிக்கையை விடுக்கவில்லை என்றும் கூறினார்.

"முன்னர் ஆறு மணிநேரங்கள் (கடலில்) இறங்கி சில ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு விஞ்ஞானிகள் திரும்பிவிடுவர் .மேலும் தற்போது விஞ்ஞானிகள் மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் கடலில் ஆழமாக செல்லக்கூடிய திறனை நாங்கள் வளர்த்து வருகிறோம், இதன்மூலம் அவர்கள் கிட்டத்தட்ட 16 மணி நேரம் அங்கு இருக்க முடியும், என்றார்.