ஒரு வளையத்தில் எத்தனை வைரங்கள் பொருத்த முடியும்? புதிய கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின்படி, பதில் 12,638 ஆகும். இந்தியாவின் மீரட் என்னும் நகரத்தை சேர்ந்த ரெனானி ஜுவல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஹர்ஷித் பன்சால் தனது சுவாரஸ்யமான வடிவமைப்பால் சாதனை படைத்துள்ளார்.

மேரிகோல்ட் அல்லது "செழிப்பான மோதிரம்" என்று பெயரிடப்பட்ட இந்த மோதிரம், அலங்கரிக்கப்பட்ட மலர் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது கின்னஸின் கூற்றுப்படி ஆயிரக்கணக்கான 38.08 காரட் இயற்கை வைரங்களால் நிறைந்துள்ளது. மோதிரம் 165 கிராமுக்கு மேல் எடையைக் கொண்டுள்ளது. இதற்கு முன் ஒரு வளையத்தில் 7,801 வைரங்கள் வைத்து ஒருவர் சாதனை புரிந்தார். அவர் ஹைதராபாத்தை தளமாகக் நகைக்கடை நிறுவனராவர் .