‘ராகுல் காந்தி பசுமை இந்தியா ‘ திட்டத்தின்கீழ் 10000 மரக்கன்றுள்...



திருச்சி மாவட்டம் கரியமாணிக்கம் பஞ்சாயத்து கன்னியாகுடி கிராமத்தில் ‘ராகுல் காந்தி பசுமை இந்தியா ‘ திட்டத்தின்கீழ் தமிமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபாண்மை பிரிவு மாநிலத்துணைத்தலைவர் பொரியாளர் அ.பேட்ரிக் ராஜ்குமார் 10000 மரக்கன்றுகளை 8 பஞ்சாயத்துக்களின் தலைவர்களிடம் ஒப்படைத்தார்.


பஞ்சாயத்து ராஜ் கண்ட பாரத்ரத்னா ராஜீவ் காந்தியியின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் விதமாக (94)கரியமாணிக்கம் பஞ்சாயத்து அதைச்சுற்றியுள்ள கிராம்ப்பஞ்சாயத்துகளில் 10000 மரக்கன்றுகள் நடும் விழாவினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபாண்மைப்பிரிவு துணைத்தலைவர் பொரியாளர் அ.பேட்ரிக்ராஜ் குமார் மரக்கன்றுகள் வழங்ங்கி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து ராஜ் கண்ட முன்னால் பிரதமர் பாரத் ரத்னா திரு. ராஜீவ் காந்தியை புகழ்ந்து உரை நிகழ்தினார் .

முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்

சு. திருநாவுக்கரசரின் ஆலோசனைப்படி ஆரம்பிக்கப்பட்ட ‘ராகுல் பசுமை இந்தியா’ என்ற தலைப்பில் 50000 மரக்கன்றுகள் நடும் திட்டம் பேட்ரிக் ராஜ்குமார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 43000 மரக்கன்றுகள் இன்றுடன் நடப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை திருச்சி மாநகர கமிஷனர், போலிஸ் டிரைனிங் சென்டர், குன்னத்தூர் மற்றும் இருங்களூர் பஞ்சாயத்து தற்போது கரியமாணிக்கம் பஞ்சாயத்து ஆகியோர் மூலமாக நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.


திருச்சிMP திருநாவுக்கரசரின் பேராதரவுடன் செயல்படும் இத்திட்டத்திற்கு பல்வேறு அரசு அமைப்புக்கள் ,பஞ்சாயத்து தலைவர்கள் தன்னார்வலர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் அதிகமாக வந்துகொண்டிருப்பதினால் இதன் தேவையை கருத்தில் கொண்டு பேட்ரிக் ராஜ்குமார் அவர்கள் கடந்த ஜூலை 15 ஆம் நாள் காமராஜரின் பிறந்த நாளில் மரக்கன்றுகள் நடும் இலக்கை 1 லட்சமாக உயர்த்தி அறிவித்தார் . வருகின்ற மழைக்காலத்திற்குள் இதனை நிறைவேற்றிட உறுதி பூண்டுள்ளார்.


கிராம்ப்புறங்களையே இலக்காக வைத்து இத்திட்டத்தினை கிராம பஞ்சாயத்து தலைவர்வர்கள் வழியாக நடப்பட்டு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மரங்களை வளர்க்க திட்டத்தினை செயல்வடிவம் பெறச்செய்துள்ளார்.


இந்நிழ்ச்சியில் பேராசிரியர் திரு.பெஞ்சமின் இளங்கோ மற்றும் அட்வகேட் திரு . சந்திரன் மற்றும் யூத் காங்கிரஸ் ஏர்போர்ட் பிரவீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் மண்ணச்சநல்லூர் ஒன்றிய பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு தலைவரும் இருங்களூர் ஊராட்சி தலைவர்

திரு S. வின்சென்ட் ,கரியமாணிக்கம் தலைவர் திரு . சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.

பஞ்சாயத்து தலைவர்கள் : வலையூர் ரெங்கராஜ், சிறுகுடி குப்புசாமி, தழுதாளப்பட்டி சேட்டு, பூனாம்பாளையம் ஹரிகிருஷ்ணன்,அழகிய மணவாளன் ரேவதி மற்றும் எதுமலை பழனியாண்டி ஆகியோர் மரக்கன்றுகளை பெற்றுக்கொண்டனர்.

Recent Posts

See All

தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்த்திருத்தத்துறை இயக்குநராக லில்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுத்துறை சிறப்பு செயலாளராக வெங்கடேஷ் நியமனம் செய்ய

Earnbounty_1068_260_0208.jpg
  • Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram
cadests.jpg
water.jpg
bag.jpg
Screenshot%20(17)_edited.jpg
XCM_Manual_1209672_1068x260_.jpg

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios